கலை வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது. எனினும் முன்னைய காலத்தில் மகிழ்வ+ட்டல் பரிமாணத்தை மட்டுமே அது கொண்டிருந்தது. ஆனால் இன்று மனிதனின் இருப்புக்குக் கூட துணைபுரியும் புதிய வடிவத்தை எழுச்சியை குறிப்பாக இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம் தற்போது உள்ள சூழ்நிலையில் கலையின் இருப்பு கேள்விக்குறியானது என்றே அனைவரும் எதிர்பார்த்திருக்கையில் சாதாரண மக்களின் வாழ்வின் இருப்புக்கு அது துணைபுரியும் அற்புதம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக நாடகம் மக்களின் வாழ்வுக்கு துணைநிற்கின்றது. துப்பாக்கி முனைகளுக்குள்ளும் கந்தக வெக்கைக்குள்ளும் கலைஞர்கள் ‘கலை’ ஆடுகிறார்கள் என்பது புதினமானதுதான். ஆனால் அந்த மண்ணின் தேவையும் வேட்கையும் அது.
கலைக்கெனத் தனியான ஊடகங்கள் வெற்றிகரமாக இதுவரை சாத்தியமானதில்லை. நிதி வசதி வாய்ப்புக்கள் அதற்கான நிர்ணய காரணிகள். இன்று தகவல்தொழில்நுட்ப யுகம் அது தந்துள்ள அளப்பரிய வளப்பிரசாதங்களை பயன்படுத்திக் கொண்டு கலைக்கான எமது பங்களிப்பை வழங்குவதற்கான முயற்சிதான் இது. யாழ்ப்பாணத்தில் மிகக் காத்திரமான அரங்க முயற்சிகள் பலவும் போருக்கு மத்தியிலும் அமைதிக்கான சூழலிலும் நடந்தேறின, நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. ஆவை பற்றி இந்தப் பக்கங்களில் இனிவரும் காலங்களில் அதிகம் பேச முடியும். சாவுக்கு மத்தியிலும் வாழ்வாதாரத்தைக் கொடுத்த நாடகங்கள், அரங்க முயற்சிகள் பற்றிய பகிர்தல்களை உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்களுக்கு கொண்டு செல்லும் இந்த முயற்சி இன்னும் பலதை ஊக்குவிக்கட்டும்.

No comments:
Post a Comment